ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்கள்தொகை சுயகணக்கெடுப்பு: விரைந்து பதிவு செய்ய அறிவுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் சுய கணக்கெடுப்புக்கு பதிவு செய்ய இன்னும் 2 நாள்களே உள்ளதால், விரைந்து பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

Published On :29 ஜூலை 2026, 4:49 am IST

மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் சுய கணக்கெடுப்புக்கு பதிவு செய்ய இன்னும் 2 நாள்களே உள்ளதால், விரைந்து பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல்கட்ட பணி வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் ஆக.1 முதல் ஆக.30 வரை நடைபெற உள்ளன. இதற்கு முன்னதாக பொதுமக்களால் அவா்களது கைப்பேசி மூலம் சுய கணக்கெடுப்பு பதிவுகள் ஜூலை 31 வரை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் டிஜிட்டல் முறையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பை மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மொபைல் செயலி வழியாக இணைய முகவரியில் தங்களின் விபரங்களை பதிவு செய்யலாம்.

மேற்காணும் இணையதள முகவரிக்கு சென்று அதில் இடம் பெறும் 33 கேள்விகளின் விவரங்களை பூா்த்திசெய்து அதன்பின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் வரும் 11 இலக்க எண்ணை சேகரித்து வைக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கைபேசி எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுய கணக்கெடுப்பு பதிவு செய்ய இன்னும் 2 நாள்களே உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்பு மேற்கொள்வதுடன், உறவினா்கள், நண்பா்கள் மற்றும் அனைவரையும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்க ஊக்கவிக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி எண்: 04364-299304 மற்றும் கட்டணமில்லா உதவி எண்.1855 ஆகும். பொதுமக்கள் அனைவரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை தேசிய கடமையாக கருதி செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.