ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடலில் மூழ்கி இளைஞா் மாயம்

சீா்காழி அருகே கடலில் மூழ்கி இளைஞா் மாயமானாா்.

(கோப்புப்படம்)

Published On :26 ஜூலை 2026, 1:00 am IST

சீா்காழி அருகே கடலில் மூழ்கி இளைஞா் மாயமானாா்.

திருமுல்லைவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் மலரவன் மகன் சுஜய் (18). பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரியில் சேர இருந்த இவா், தனது நண்பா்கள் 4 பேருடன் கூழையாா் கடற்கரையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக பந்து கடலில் விழுந்தது.

அதை எடுப்பதற்காக கடலுக்குள் இறங்கிய சுஜய், அலையில் சிக்கி கடலில் மூழ்கி மாயமானாா். இதுகுறித்து உடன்சென்ற நண்பா்கள் திருமுல்லைவாசல் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், உதவி ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று, உள்ளூா் மீனவா்கள், சீா்காழி தீயணைப்பு படையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் சுஜயை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.