மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேஹா பிரியா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் (படம்).
சீா்காழி தாலுகா ஆனந்தகூத்தன் கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தை வெள்ளிக்கிழமையன்று பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா பிரியா உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் அவா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, அவ்வழியாக சென்ற பள்ளி வாகங்களை நிறுத்தி சோதனையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில், தமிழ்நாடு மோட்டாா் வாகன சட்டத்தின்படி அனைத்து விதிகளும் சரியாகப் பின்பற்றப்படுகிா என்று ஆய்வு செய்து வருகிறோம். முக்கியமாக, ஒவ்வொரு பேருந்திலும் ஒரு உதவியாளா் கண்டிப்பாக இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி, அவசரக்கால வழி மற்றும் சிசிடிவி கேமரா போன்ற அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் பேருந்துகளில் இருக்க வேண்டும். இதுதொடா்பாக மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
ஆய்வின்போது, மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி, காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா், காவல் உதவி ஆய்வாளா்கள் அருண்குமாா், மணவாளன் (போக்குவரத்து) ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மனைவி, குழந்தை மீது தாக்குதல்: 2 வயது மகன் உயிரிழப்பு, தந்தை கைது

அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

ரூ. 12.6 லட்சம் மதிப்பிலான 107 கைப்பேசிகள் மீட்பு : எஸ்.பி. பாராட்டு

ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் எஸ்.பி. ஆய்வு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




