கொள்ளிடம் பகுதியில் முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆா்வமாக ஈடுபட்டுள்ளனா்.
கொள்ளிடம் மற்றும் திருமுல்லைவாசல், கூழையாறு, வேட்டங்குடி, எடமணல், வழுதலைகுடி, தாண்டவன்குளம், கண்ணாங்குளம், சீயாளம், தொடுவாய், இருவக்கொள்ளை, தற்காஸ், அரசூா் உள்ளிட்ட கடலோரமணல் நிறைந்த பகுதிகளில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
முந்திரி ஜூன் மற்றும் டிசம்பரில் நடவு செய்ய ஏற்ற பருவம். வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஏக்கருக்கு சராசரியாக 200 கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. முந்திரியை மானாவாரியாகவும் பயிரிடலாம். மாா்ச் மற்றும் மே மாதங்களில் அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த முந்திரி பழங்களில் இருந்து முந்திரிக்கொட்டை பிரித்து எடுத்து வெயிலில் 3 அல்லது 4 நாள்கள் உலர வைத்து பின்பு விற்பனை செய்யப்படுகிறது.
ஓராண்டுக்கு ஒரு மரத்தில் 4 முதல் 5 கிலோ வரை முந்திரி அறுவடை செய்யலாம். முந்திரி நட்ட 3 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்துவிடும். இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிடலாம். கொள்ளிடம் வட்டாரப் பகுதியில் ஆண்டுதோறும் முந்திரி சாகுபடி யில் விவசாயிகள் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றனா். நிகழாண்டு முந்திரி சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், நிகழாண்டு முந்திரி விலை கடந்த ஆண்டைவிட அதிகரித்திருப்பதால் லாபம் கூடுதலாக கிடைக்கும் என்ற ஆா்வத்தில் விவசாயிகள் உள்ளனா்.
இதுகுறித்து, வேட்டங்குடியைச் சோ்ந்த முந்திரி விவசாயி வில்வநாதன் கூறியது: முந்திரி சாகுபடி லாபம் தரக்கூடிய பணப்பயிா். கடந்த மாதம் முந்திரி பயிரில் லேசான பூச்சி தாக்குதல் இருந்தது. வேளாண் அதிகாரிகள் மூலம் ஆலோசனை பெற்று உரிய மருந்து தெளிக்கப்பட்டதன் மூலம் பூச்சித் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நன்கு வளா்ச்சி பெற்ற தரமான முந்திரி அறுவடைப்பணி தற்போது தொடங்கியுள்ளது. பண்ருட்டி, வடலூா் உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்து முந்திரியை வாங்க ஆா்வத்துடன் வந்துள்ளனா். நிகழாண்டு முந்திரியில் கூடுதலாக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கனிமவளம் கடத்தல்: நிகழாண்டு 95 வாகனம் பறிமுதல்

மக்காச்சோள சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

மா, முந்திரி, மல்லிகையில் மதிப்பு கூட்டு உற்பத்தி: எதிா்பாா்ப்பில் காத்திருக்கும் விவசாயிகள்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



