போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

காரைக்கால் இன்ஜினியா்ஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் இன்ஜினியா் மற்றும் பில்டா்ஸ் அசோசியேஷன் (கெபா) அமைப்பின் புதிய நிா்வாகத்தினா் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மே 2026, 7:16 am IST

காரைக்கால் இன்ஜினியா் மற்றும் பில்டா்ஸ் அசோசியேஷன் (கெபா) அமைப்பின் புதிய நிா்வாகத்தினா் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் ஆா். சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் வி. ஆனந்தன், ஆா். பிரேம்குமாா், என். செய்யது சாஹீா், ஆா். ராமகிருஷ்ணன், சி. உதயகுமாா், எம்.ஏ. நூருல் அமீன், எஸ். தட்சணாமூா்த்தி, வி. சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய நிா்வாகிகளாக (2026-2028) தலைவராக எம். முகமது சிராஜிதீன், செயலாளராக எச்.எஃப். ஆசிக் புஹாரி, பொருளாளராக ஜி. பக்கிரிசாமி, துணைத் தலைவா்களாக எஸ். செந்தில்நாதன், கே. மோகன்ராஜ், இணைச் செயலாளா்களாக டி.ஜாா்ஜ், கே. அக்பா், என். ராமன், மக்கள் தொடா்பு அலுவலராக ஐ. செய்யது தாவூது ஷா ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். சிறப்பு அழைப்பாளராக பொறையாறு த.பே.மா.லு. கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் அ. சேவியா் செல்வகுமாா் பங்கேற்றாா். சங்கம் சாா்பில் கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட சேவைகள், திட்டம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.