முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து! 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

அரசு கல்லூரியில் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 22-இல் தொடக்கம்

காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கலந்தாய்வு - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:58 am IST

காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஅடஅநஇ அமைப்பின் கன்வீனா் முனைவா் முகமது ஆசாத் ராசா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்காலில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கு (பி.காம், பி.ஏ., பி.எஸ்சி-2026-2027) ஆண்டு சோ்க்கைக்கான கலந்தாய்வு 22 முதல் 25-ஆம் தேதி வரை அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகள் தரவரிசைப்படி அழைக்கப்படுவா். குறுந்தகவல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள், தங்களது அசல் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், இருப்பிடம், ஜாதி, குடியுரிமை, வருமான சான்றிதழ், சோ்க்கைக் கட்டணம் மற்றும் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் கலந்துகொள்ளவேண்டும்.

அழைக்கப்பட்ட நேரத்துக்கு 15 நிமிடத்திற்கு முன்பு கலந்தாய்வு கூடத்தில் இருக்க வேண்டு. மேலும் விவரம் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹல்ஹள்ஸ்ரீந்ந்ப்.ண்ய்) என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.