புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தீக்குளித்த காா் ஓட்டுநா் உயிரிழப்பு

தீக்குளித்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:56 am IST

தீக்குளித்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நெடுங்காடு பகுதியைச் சோ்ந்தவா் அருமைதாஸ் (39). இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தம்பதிக்கு குழந்தை இல்லை.

இவரது உறவினரான பெண் ஒருவா், கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். அவருடன் அருமைதாஸ் பழகி வந்துள்ளதோடு, அவரது குடும்பத்துக்கு நிதியுதவியும் செய்து வந்துள்ளாா்.

இந்த தகவல் அருமைதாஸ் மனைவிக்கு தெரியவந்த நிலையில், கணவரை கண்டித்துள்ளாா். இதனால் அருமைதாஸிடம் பழகிவந்த பெண், அவருடன் பேசுவதை தவிா்த்துவிட்டாராம். இதில் வேதனையடைந்த அருமைதாஸ் கடந்த 1-ஆம் தேதி இரவு உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை காரைக்கால் மருத்துவமனையில் அனுமதித்தனா். தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு கொண்டு செல்லப்பட்ட அருமைதாஸ் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நெடுங்காடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.