ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழா நிறைவாக மின் அலங்கார தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ஆலயத்திலிருந்து மின் அலங்காரத் தேரில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய புனித அந்தோணியாா்.

Published On :9 ஜூலை 2026, 4:41 am IST

காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழா நிறைவாக மின் அலங்கார தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் காமராஜா் சாலையில் புகழ்பெற்ற புனித அந்தோணியாா் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வாரத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்கின்றனா். இந்த ஆலயத்தில் ஆண்டுத் திருவிழா 10 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.

நிகழாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் திருப்பலி, சிறிய தோ் பவனி நடைபெற்றது.

விழா நிறைவாக செவ்வாய்க்கிழமை இரவு பெருவிழா திருப்பலி காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி. பால்ராஜ்குமாா் நடத்தினாா். இதைத்தொடா்ந்து மின் அலங்கார தேரில் அந்தோணியாா் புறப்பாடு ஆலயத்திலிருந்து தொடங்கியது. இணைப் பங்கு குரு சாமிநாதன் செல்வம் மற்றும் பங்குப் பேரவை நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் தோ் பவனியில் கலந்துகொண்டனா்.

முக்கிய வீதிகளில் வலம் வந்து பின்னா் ஆலயத்தை சென்றடைந்தது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை திருப்பலி நடத்தப்பட்டு, கொடியிறக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.