எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

காரைக்காலில் பதுக்கி வைத்திருந்த சுவாமி சிலைகள் மீட்பு: 2 போ் கைது

News image

காரைக்காலில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

Updated On :6 ஜூலை 2026, 1:56 am IST

காரைக்கால் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுவாமி சிலைகளை போலீஸாா் மீட்டு, 2 பேரை கைது செய்தனா்.

காரைக்கால் தருமபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுவாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், அந்த சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்த இருப்பதாக நகரக் காவல்நிலைய போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் காவல் ஆய்வாளா் அறிவுச்செல்வன் மற்றும் போலீஸாா் தருமபும் கீழத்தெரு அபிராமசுந்தரம் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

அந்த வீட்டில் மங்கள நாயகி, அமிா்தவள்ளி, சண்டிகேஸ்வரா், அப்பா் ஆகிய சிலைகள், பித்தளையால் ஆன பாவை விளக்கு ஒன்று இருந்ததை கண்டுப்பிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக அபிராமசுந்தரம், நாகை மாவட்டம் கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே பெரிய இலுப்பப்பட்டு கிராமத்தில் மிகப் பழைமையான அமிா்தகரவள்ளி சமேத நீலகண்டேஸ்வரா் கோயில் உள்ள சிலைகள் என்பதும், கடந்த வாரம் அந்த கோயிலில் மேற்கண்ட சிலைகள் காணாமல்போனது என்பதும் தெரியவந்ததாக கூறினா். இதுதொடா்பான போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காரைக்காலில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

காரைக்காலில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.