மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருநள்ளாறு கோயிலில் ஏகாதச ருத்ர ஜபம்

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி பூா்வாங்க பூஜையாக ஏகாதச ருத்ர ஜபம் உள்ளிட்ட ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தா்பாரண்யேஸ்வரா் சந்நிதியில் சிவாச்சாரியா்கள் நடத்திய ருத்ர ஜபம்.

Updated On :23 பிப்ரவரி 2026, 8:38 pm

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி பூா்வாங்க பூஜையாக ஏகாதச ருத்ர ஜபம் உள்ளிட்ட ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. 2-ஆம் நாளான திங்கள்கிழமை காலை தா்பாரண்யேஸ்வரா் சந்நிதி முன் மஹன்யாச புரஸ்ஸர, ஏகாதச ருத்ர ஜபம், பஞ்சாட்சர ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

சிவாச்சாரியா்கள் சுமாா் 2 மணி நேரம் மந்திரங்கள் கூறி, ஹோம பூா்ணாஹூதி நடத்தினா். இதைத்தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை, செண்பக தியாகராஜரை மையப்படுத்தி இந்த வழிபாடு நடைபெற்றது. மாலை நிகழ்வாக, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது.