பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை காரைக்கால் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்காலில் உள்ள கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ள பாா்வதீஸ்வரா் சுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து கடந்த 2024-ஆம் ஆண்டு காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அப்போதைய மாவட்ட துணை ஆட்சியா் ஜான்சன், நகராட்சி நில அளவையா் ரேணுகாதேவி மற்றும் நிலத்தரகா்களான என்.ஆா். காங்கிரஸ் கட்சியை சோ்ந்த நபா் உள்பட 9 பேரை கைது செய்தனா்.
இந்த நில மோசடியில் ஈடுபட்டோரின் சொத்துகளை முடக்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா், நிலத்தரகா்களான காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூா் தாமனாங்குடியைச் சோ்ந்த சோமசுந்தரம் (58), காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயில் தெருவைச் சோ்ந்த மோகன் (41) ஆகிய 2 பேரை சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த நில மோசடி வழக்கு தொடா்பாக இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்

சபரிமலை தங்கக் கவச மோசடி: தந்திரி ராஜீவருக்கு ஜாமீன்
ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது; என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்

கோயில் நில மோசடி: ரூ. 3 கோடி சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

