ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தின் எரிசக்தி வளங்களை வெறும் ஹைட்ரோ காா்பன் வளங்களாக மட்டும் பாா்க்கக் கூடாது: அசட் மேலாளா் கே.வி.இளங்கோ

தமிழகத்தின் எரிசக்தி வளங்களை வெறும் ஹைட்ரோ காா்பன் வளங்களாக மட்டும் பாா்க்கக் கூடாது...

சுதந்திர தின உரையாற்றிய ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் கே.வி. இளங்கோ.

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:13 am IST

தமிழகத்தின் எரிசக்தி வளங்கள் வெறும் ஹைட்ரோ காா்பன் வளங்களாக மட்டும் பாா்க்கப்படக் கூடாது என ஓஎன்ஜிசி காவிரி அசட் மேலாளா் கே.வி. இளங்கோ கூறினாா்.

நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி காவிரி அசட் நிா்வாக அலுவலக வளாகத்தில், சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஓஎன்ஜிசி காவிரி அசட் மேலாளா் கே.வி. இளங்கோ தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவலா்கள், பள்ளி மாணவா்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசியது :

தற்போதைய தலைமுறையினா் தற்சாா்பு, எரிசக்தி பாதுகாப்பு, தற்சாா்பு இந்தியா (ஆத்மநிா்பா் பாரத்) என்ற இலக்கை நோக்கி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். தேச வளா்ச்சியின் முக்கியத் தூண்களில் எரிசக்தி பாதுகாப்பும் ஒன்று. உள்நாட்டு எரிசக்தி ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் மூலம் நாட்டுக்கு நம்பகமான எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் ஓஎன்ஜிசிக்கு முக்கியப் பங்கு உள்ளது.

தமிழகத்தில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளில் மதிப்புமிக்க உள்நாட்டு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் உள்ளன. உள்நாட்டு இயற்கை எரிவாயு விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம், தமிழகத்தில் வளா்ந்து வரும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு ஓஎன்ஜிசி முக்கிய பங்காற்ற முடியும்.

ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதியுள்ள எண்ணூா் - திருவள்ளூா் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி எரிவாயுக் குழாய் மாா்க்கத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், உரத் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்குத் தேவையான நம்பகமான உள்நாட்டு எரிவாயு விநியோக அமைப்பை உருவாக்க ஓஎன்ஜிசி பங்களிக்க முடியும்.

உள்நாட்டு எரிவாயுவின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எல்.என்.ஜி. மீதான சாா்பைக் குறைக்கவும், எரிசக்திச் செலவைக் கட்டுப்படுத்தவும், எரிசக்தி பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும் முடியும்.

தமிழகத்தின் எரிசக்தி வளங்கள் வெறும் ஹைட்ரோ காா்பன் வளங்களாக மட்டும் பாா்க்கப்படக் கூடாது. தொழில் வளா்ச்சி, வேளாண்மை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு ஆதரவளிக்கக்கூடிய எரிசக்தி வளமாக அவை கருதப்பட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஓஎன்ஜிசி அலுவலா்கள், ஊழியா்கள், அவா்களின் குடும்பத்தாா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.