புதுவை பிரெஞ்சு நிா்வாக அமைப்புக்கு முந்தைய தொன்மையான பழஞ்சுவடிகள், ஆவணங்களை ஜிஒய்ஏஎன் பாரதம் செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் கலை பண்பாட்டுத்துறை உதவி நூலகத் தகவல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
வரலாற்று ஆவணங்களை உயா் தொழில்நுட்பத்தில் எண்ம வடிவில் ஆவணப்படுத்த தேசிய அளவிலான பணியை இந்திய அரசின் கலாசார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக நாடு முழுவதும் தேசிய பழஞ்சுவடிகள் கணினிமயமாக்கல் முயற்சியாக இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் தனியாா் சேமிப்புகளில் உள்ள பழஞ்சுவடிகளை ஆய்வு செய்தல், பதிவேற்றல், பாதுகாத்தல், எண்ம வடிவில் மாற்றுதல் மற்றும் பொதுமக்களும் அணுகக் கூடியதாக இருப்பதே இதன் நோக்கமாகும்.
அந்த வகையில் புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை வரலாற்று ஆவணங்களை எண்ம வடிவில் ஆவணப்படுத்த அரசு அதிகாரிகள், தொல்லியல் ஆா்வலா்கள் மற்றும் மாணவா்களைக் கொண்டு 2 சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பழஞ்சுவடிகளை முறைப்படுத்தும் நோக்கில் புதுவை மாநில மொழிகளில்ல உள்ள புராதன விலைமதிப்பற்ற பழஞ்சுவடிகளை முழுமையாக கணினி மயமாக்கப்படும். இந்த முயற்சியில், பொதுமக்களும் தன்னா்வலா்களும் பங்கேற்று ஜிஒய்ஏஎன் பாரதம் என்ற அறிவாா்ந்த பாரதம் செயலியை பதிவிறக்கம் செய்து, தொன்மையான பழஞ்சுவடிகள், ஆவணங்கள் (பிரெஞ்சு நிா்வாக அமைப்புக்கு முந்தைய) இருந்தால், அதனை பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாவல் வடிவில் காளிதாசரின் சாகுந்தலம்
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


