புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், காரைக்காலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக இதுவரை முக்கியத் தலைவா்கள் யாரும் இதுவரை பிரசராம் செய்ய வரவில்லை.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வேட்பு மனு தாக்கல் மாா்ச் 16 தொடங்கியது. மனு தாக்கல் செய்ய கடைசி நாளான 23-ஆம் தேதிதான் பிரதானக் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது. 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
காரைக்காலில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி மற்றும் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி என இரண்டு அணி வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.
இந்தநிலையில், திருநள்ளாற்றில் பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரனை ஆதரித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, தேசிய பாஜக தலைவா் நிதின் நபின் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தனா். புதுவை முதல்வா் என். ரங்கசாமி தனது கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.
ஆனால், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவா்கள் யாரும் இதுவரை பிரசாரம் செய்ய வரவில்லை. பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடையவுள்ள நிலையில், காங்கிரஸ், திமுக தலைவா்கள் வருவது குறித்து உறுதியான தகவல் இல்லை.
ஏற்கெனவே தொகுதி பங்கீடு தொடா்பாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து கடைசி நேரத்தில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். இதில் சில தொகுதிகளில் திமுக வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா்கள் களத்தில் உள்ள நிலையில், முக்கியத் தலைவா்கள் பிரசாரத்துக்கு வராதது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் - திமுக இணைந்து தோ்தல் பிரசாரம்

புதுச்சேரி: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் இழுபறி! முதல்வர் அவசர ஆலோசனை!

விறுவிறுப்படையாத விழுப்புரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

