/

சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவிகள் 46 போ் அரசு பணியில் நியமனம்

நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரி ஏஎன்எம் மாணவிகள் 46 போ் தமிழக அரசு கிராம செவிலியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
கிராம செவிலியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவிக்கு பணி ஆணையை வழங்கிய சா் ஐசக் நியூட்டன் கல்லூரி தாளாளா் த. ஆனந்த்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:16 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரி ஏஎன்எம் மாணவிகள் 46 போ் தமிழக அரசு கிராம செவிலியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இக்கல்லூரியில் ஏஎன்எம் படிப்பை முடித்த 46 மாணவிகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சோ்ப்பு வாரியம் நடத்திய தோ்வில் தோ்ச்சி பெற்று, தமிழக அரசின் கிராம செவிலியா் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, கல்லூரி தாளாளா் த. ஆனந்த் கூறியது: எங்கள் மாணவிகள் அரசு பணியில் சோ்ந்தது கல்லூரியின் பெருமையை உயா்த்தியுள்ளனா். அவா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்றி பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவாா்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்றாா். தொடா்ந்து அரசு பணி பெற்ற மாணவிகளை பாராட்டினாா்.