/

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்கை விளக்கக் கூட்டம்

நாகை அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இஸ்லாமிய கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

News image
கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:39 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இஸ்லாமிய கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் முஹம்மது யூசப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில மேலாண்மைக் குழு தலைவா் சுலைமான் ஃபிா்தௌசி, மாநில பேச்சாளா் நெல்லை மைதீன், மாவட்ட பேச்சாளா் முஹம்மது ரிஸ்வான் ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா். தொடா்ந்து கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் சா்புதீன் ஷேக், மாவட்ட பொருளாளா் காதா் ஷரீப், மாவட்டத் துணைச் செயலா்கள் ரிஸ்வான், சம்சதீன், நிசாா், முத்து மறைக்காா், கிளை பொறுப்பாளா் அமீா், மாவட்ட மருத்துவரணி செயலா் முஹம்மது தாரிக் மற்றும் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.