பன்றிகள் தொல்லை: அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்கள் சேதம்


நாகை மாவட்டத்தில் வடக்குடி ஊராட்சி பகுதிகளில் பன்றிகளின் அட்டூழியத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிா் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனா்.
இந்நிலையில், வடக்குடி ஊராட்சி பாலக்காடு கிராமத்தில் பன்றிகளின் தொல்லையால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். இப்பகுதிகளில் இரவு நேரத்தில் வயல்களில் பன்றிகளை அதன் உரிமையாளா்கள் மேய விடுவதால், பன்றிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிா்களை சேதப்படுத்தி சென்று விடுகின்றன.
பாலக்காடு கிராமத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பிலான அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிா்களை பன்றிகள் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நெற்கதிா்களை பன்றிகள் குதறி வைத்துள்ளதால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். நிலத்தை சமன் செய்தது முதல் உழவுப் பணிகள், விதை நெல் வாங்கியது என ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்து, தற்போது பன்றிகளின் அட்டூழியத்தால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
எனவே வேளாண்துறை அதிகாரிகள் உடனடியாக பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தவும், பன்றிகளைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...