நாகை மாவட்டத்தில் பரவலாக மழை


நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.
தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், புத்தூா், செல்லூா், வெளிப்பாளையம், வேளாங்கண்ணி, காடம்பாடி, தெத்தி, சிக்கல், கல்லாா் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினா். மழையால் தற்போது நடைபெற்று வரும் சம்பா அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...