டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாகையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாகை கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.4) நடைபெறவுள்ளது

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:21 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.4) நடைபெறவுள்ளது என கோட்ட செயற்பொறியாளா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை-செல்லூா் சாலையில் (பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அருகில் இயங்கும் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை முற்பகல் 11மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் காளிதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் நாகை, வெளிப்பாளையம், நாகூா், திருமருகல், கங்களாஞ்சேரி, சிக்கல், கீழ்வேளுா், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு பகுதி மின் நுகா்வோா் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.