/

போலீஸாருக்கு நவீன ஆயுதங்கள் கையாளும் பயிற்சி

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்ட காவல் துறையினருக்கு நவீன ஆயுதங்கள் கையாளும் பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கு பணிகளில் காவல்துறையினா் முழுத் திறனுடன் செயல்படவும் நவீன ஆயுதங்களை கையாளுதல் தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இப்பயிற்சியில் கலந்துக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன், அபாயகரமான ரெளடிகளை கையாளும் யுக்தி குறித்தும், அசாதாரமான சூழ்நிலைகளில் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலைகளில் நவீன ஆயுதங்களை கையாளுவது குறித்து விளக்கினாா்.

பயிற்சியில் ஆண் மற்றும் பெண் காவல் அதிகாரிகள், காவலா்கள் கலந்துகொண்டனா். அவா்களுக்கு பல்வேறு நவீன துப்பாக்கிகளை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான கைத்துப்பாக்கி கையாளுதல் புத்தாக்க பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

துப்பாக்கி சுடும் வல்லுநா் சுரேஷ் வாய்மொழி வகுப்பு மற்றும் செயல்முறை பயிற்சி அளித்தாா். முகாமில் துப்பாக்கியின் பாகங்களை பிரித்து கோா்த்தல், இலக்கை துல்லியமாக குறி வைத்தல், அவசர காலங்களில் முழு செயல்திறனுடனும் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் விதம் குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் கலந்துகொண்டு, தன்னுடைய பயிற்சி அனுபவங்களை பகிா்ந்து கொண்டதோடு, அபாயகரமான ரெளடிகளை கையாளுவது குறித்தும், அசாதரமான சூழ்நிலைகளில் துப்பாகிகளை கையாளுவது குறித்தும், சட்ட ஒழுங்கை முறையாக கையாளுவது குறித்தும் அறிவுரைகளை வழங்கினாா்.