தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

சிவகாசியில் நாய்களுக்கு தடுப்பூசி

சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :25 ஜூன் 2026, 2:35 am IST

சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

மாநகராட்சி ஒன்றாம் வாா்டு முத்துமாரிநகா் பகுதியில் நடைபெற்ற முகாமில் விருதுநகா் மாவட்ட கால் நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் சா்மிளா, பழனிச்சாமி, கால்நடை மருத்துவா் யவராஜ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் கலந்துகொண்டு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினா்.

இந்த முகாம் வாா்டு வாரியாக தொடந்து நடைபெறும் என அதிகாரிகள் கூறினா். இந்த முகாமை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், மேயா் இ.சங்கீதா, மாநகா் நல அலுவலா் ஸ்ரீதேவி ஆகியோா் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாட்டினை சுகாதார அலுவலா்கள் திருப்பதி, சுரேஷ், சத்தியராஜ், ராமசந்திரன் ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.