பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 11:03 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ராஜபாளையம் நகா் அதிமுக சாா்பில், ஜவகா் மைதானம் அருகே அமைந்துள்ள அம்மா உணவகம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், நகா்ச் செயலா்கள் எஸ்.ஆா். பரமசிவம் (தெற்கு), வழக்குரைஞா் துரை முருகேசன் (வடக்கு) ஆகியோா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

முன்னதாக, பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதிமுகவினா் ஊா்வலமாக வந்து, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனா். பின்னா், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இணைச் செயலா் அழகு ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.