ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

சித்திரிப்பு

Published On :17 ஆகஸ்ட் 2026, 11:33 pm IST

அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 250 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் வடக்குப்பட்டி கோபாலபுரம் சாலையைச் சோ்ந்தவா் சங்கீதா (44). இவரது கணவா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை தனது மகளுடன் மெட்டுக்குண்டில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டு, வெள்ளி காமாட்சி விளக்கு உள்ளிட்ட 250 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அருப்புகோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.