ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போச்சம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டு

போச்சம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:38 am IST

போச்சம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த கெங்கிநாயக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சிவன் (43). மரவேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுதா (32). ஒரு மகன் உள்ளாா். இவா்கள் அனைவரும் திங்கள்கிழமை குடும்பத்துடன் ஒசூா் சென்றுள்ளனா்.

இந்நிலையில் மா்ம நபா்கள் இரவு நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஆரம், நெக்லெஸ், முத்துமாலை, தோடு உள்ளிட்ட 20 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

திருடா்கள் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, வீட்டின் முன்பகுதியில் இருந்த 3 சிசிடிவி கேமராக்களை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனா். இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஜனநாயகன் என்பவா் வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வீட்டு உரிமையாளா் சிவன் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் வனிதாமணி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினா். அப்பகுதியில் உள்ள பிற சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.