ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் 1009 அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக வளா்ந்த ஆண்டாள், ரெங்கமன்னாரை திருமணம் செய்வதற்காக தனது குல தெய்வமான அழகா் கோயில் பெருமாளுக்கு 100 தடா அக்கார அடிசில், 100 தடா வெண்ணெய் படைப்பதாக வேண்டிக் கொண்டாா்.
இதையறிந்த ராமானுஜா் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அழகா் கோயில் பெருமாளுக்கு 100 தடா அக்கார அடிசில் படைத்தாா்.
இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் ராமானுஜா் அவதரித்த சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். புதன்கிழமை ராமானுஜரின் 1009-வது ஜெயந்தியை முன்னிட்டு, வடபத்ரசாயி சந்நிதியில் உள்ள ராமானுஜா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டாள் கோயிலில் சித்திரை மாத வசந்த உத்ஸவம்

ஸ்ரீபெரும்புதூா் ராமானுஜா் கோயில் தோ் திருவிழா!

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஆண்டாள் கோயிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


