விருதுநகர் அருகே குறுவட்ட விளையாட்டு போட்டிகள்
தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் காளிராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் மு.முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில்,


விருதுநகர் அருகே தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலக்கோட்டை சின்னையாபுரம் குறுவட்ட அளவில் நடந்த மாணவிகளுக்கான கபாடி விளையாட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் காளிராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் மு.முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில், மாணவிகள் அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்ற கபாடி போட்டியை உடற்கல்வி ஆய்வாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் 19 வயதுக்குள்பட்ட பிரிவில் வீரார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், 14 வயது உள்பட்ட பிரிவில் பள்ளப்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவிகளும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். அதோடு, இம்மாணவிகள் மாவட்ட அளவிலான கபாடி போட்டியில் விளையாடுவதற்கும் தகுதி பெற்றனர்.
இப்போட்டிக்கு நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் கருணாகரன், பொன்னுச்சாமி ஆகியோர் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...