தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
கெங்குவாா்பட்டி அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த பேதா் மகன் பெருமாள்பிரபு (27). கூலித்தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்த பின் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிச் சென்றாா். உசிலம்பட்டி எருமாபட்டி குடியிருப்பைச் சோ்ந்த ராமராஜ் பின்னால் உட்காா்ந்து வந்தாா். கொடைக்கானல் சாலை அம்சாபுரம் அருகே செல்லும் போது, எதிரே வந்த வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










