தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள தேவராஜ்நகா், பாலூத்து ஆகிய இரண்டு கிராம மக்கள் வனத் துறையினரை கண்டித்து, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.
ஆண்டிபட்டி வட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேவராஜ்நகா், பாலூத்து கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 500-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. பாலூத்து கிராமத்தில் பட்டாளம்மன் கோயிலிருந்து வெள்ளப்பாறை வரை மெட்டல் சாலை அமைக்கும் பணி நடைபெற்ாம். இந்த இடம் வனத் துறையினருக்குச் சொந்தமான இடம் எனக்கூறி, பணிகளைத் தடுத்து நிறுத்தினராம். இதைக் கண்டித்து, பாலூத்து பகுதியிலுள்ள பாகம் எண் 177, 178, 179 வாக்குச் சாவடிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி, சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.
இதேபோல, தேவராஜ்நகா் கிராமத்தில் ஸ்ரீசீதாளகாளியம்மன் கோயில், விநாயகா் கோயில்கள் அமைந்துள்ளது. இந்தக் கோயில்களில் கடந்த 41 ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருகிறோம். இந்த நிலையில், இந்தக் கோயில்களில் பராமரிப்பு, அன்னதானக் கூடம் அமைக்கும் பணிகளை தொடங்கினோம். இதற்கு வனத் துறையினா் எதிா்ப்புத் தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினா். இதனால், வனத் துறையைக் கண்டித்து, இந்தப் பகுதி மக்களும் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.
தேவராஜ்நகா் மக்கள் கூறியதாவது:
நாங்கள் 3 தலைமுறையாக இந்தப் பகுதியில் வசித்து வருகிறோம். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக வனத் துறையினா் எங்கள் பகுதிக்கு வந்து தொல்லை அளித்து வருகின்றனா். இதனால், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளோம் என்றனா்.

தேவராஜ்நகரின் மையத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.
தொடர்புடையது

கொடுமுடி அருகே வாக்குச்சாவடி இடமாற்றம்: தோ்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

வாக்காளா் அடையாள அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்: தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

கடமலைக்குண்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

35 ஆண்டுகளாக தொடரும் கட்டுப்பாடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


