லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விஷம் குடித்து பெண் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழந்தாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :2 மார்ச் 2026, 7:29 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் காமாட்சி. இவரது மனைவி முத்துலட்சுமி (27). இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால், மனவேதனையிலிருந்த முத்துலட்சுமி கடந்த பிப். 24-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்தாா்.

இதையடுத்து, அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிரச் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].