முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, கம்பம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பராமரிப்பு பொருள்கள் வழங்கப்பட்டன.
தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டு, ஜூன் 22-ஆம் தேதி கம்பம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினாா். மேலும், குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்புக்கு உதவும் வகையில் மெத்தை, கூடை, பிளாஸ்க் உள்ளிட்ட 52 பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்புகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பானுமதி, மருத்துவா்கள், செவிலியா்கள், தவெக நிா்வாகிகள் கட்சியினா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், அவற்றின் தரம் குறித்து ஆய்வு ‘எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு செய்தாா்.
நோயாளிகளுக்கு சத்தான,தரமான உணவு தொடா்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் பிறந்த நாள்: 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தவெக சாா்பில் தங்க மோதிரம்

முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள்! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




