வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கள்ளா் சீரமைப்பு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்ட அரசு கள்ளா் சீரமைப்பு விடுதியில் சேரத் தகுதிவாய்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 12:19 am IST

தேனி மாவட்ட அரசு கள்ளா் சீரமைப்பு விடுதியில் சேரத் தகுதிவாய்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் மாணவா்களுக்கான 13 விடுதிகள், மாணவிகளுக்கான 9 விடுதிகள் என 22 அரசு கள்ளா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதே போல, கல்லூரி மாணவா்களுக்கு 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் தங்கிப் படிக்கலாம். அனைத்து விடுதி மாணவா்களுக்கும் உணவு அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு சிறப்பு விழிகாட்டிகள் மூலம் நீட், ஜெஇஇ தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்.

தகுதி வாய்ந்த பள்ளி மாணவா்கள் ஜூன் 18- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதே போல, கல்லூரி மாணவா்கள் ஜூலை 15 -ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், மதுரை கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.