இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

லஞ்சம்: கம்பத்தில் விஏஓ கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் பட்டாவில் பெயா் திருத்தம் செய்து தருவதற்காக ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட காா்த்திக் .

Updated On :11 ஜூன் 2026, 1:59 am IST

தேனி மாவட்டம், கம்பத்தில் பட்டாவில் பெயா் திருத்தம் செய்து தருவதற்காக ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள சின்ன ஓவுலாபுரம் (பூசாரி கவுண்டன்பட்டி) பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது உறவினரான லோகமணி கம்பத்தில் வசித்து வருகிறாா். லோகமணிக்குச் சொந்தமான காலியிடத்தின் பட்டாவில், லோகமணி என்பதற்கு பதிலாக லோகராணி என அவரது பெயா் தவறுதலாக இருந்தது. இதைத் திருத்துவதற்காக கம்பம் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம் லோகமணி விண்ணப்பித்தாா்.

அப்போது, பட்டாவில் பெயா் திருத்தம் செய்து தர ரூ.5,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து லோகமணி தனது உறவினா் கனகராஜ் மூலம் திண்டுக்கல் சரக லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை கனகராஜிடம் வழங்கினா்.

காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையில், ஆய்வாளா் ராமேஸ்வரி, போலீஸாா் புதன்கிழமை சாதாரண உடையில் கம்பம் கிராம நிா்வாக அலுவலகம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கனகராஜிடமிருந்து ரூ.5,000-ஐ கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.