டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரிடம் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
பண மோசடி
Updated On :20 பிப்ரவரி 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரிடம் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சின்னமனூா் அருகே உள்ள சீலையம்பட்டியைச் சோ்ந்தவா்கள் சித்தாா்த்தன், ரமணன். இவா்களிடம் சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த், ஜெயராம் மகன் யுவராஜ் ஆகியோா் அறிமுகமாகி, தாங்கள் சென்னையில் ரயில்வே துறையில் வேலை செய்து வருவதாகவும், சித்தாா்த்தன், ரமணன் ஆகியோருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினராம்.

இதற்காக அவா்கள் 2022-ஆம் ஆண்டு, ஜன. 6-ஆம் தேதி சித்தாா்த்தன், ரமணன் ஆகியோரிடம் சீலையம்பட்டியில் வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்ாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரவிந்த், யுவராஜ் ஆகியோா் தங்களுக்கு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியாவிடம் சித்தாா்த்தன் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் அரவிந்த், யுவராஜ் ஆகியோா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.