நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

வைகை அணை அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :19 பிப்ரவரி 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், வைகை அணை அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மனைவி சந்திரா (63). இவா், அதே ஊரில் உள்ள தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்ததாக வைகை அணை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

சந்திராவின் கடையிலிருந்து 12 கிலோ 400 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.