ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

போடி, கம்பம் பகுதிகளில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

போடியில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை, ஆடிப்பூரத்தை முன்னிட்டு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

போடி, கம்பம் பகுதிகளில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாா் சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடத்தப்பட்டு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், தீபாராதனை நடைபெற்றது. திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இதேபோல போடி பெரிய சவுடம்மன் கோயில், சாலை காளியம்மன் கோயில் , திருமலாபுரம் சவுண்டீஸ்வரி அம்மன் கோயில், வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள மீனாட்சியம்மன் சந்நிதியில் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கம்பம்: கம்பம் அருகேயுள்ள சாமாண்டிபுரத்தில் அமைந்துள்ள சாமாண்டியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். முன்னதாக, அம்மனுக்கு மஞ்சள், இளநீா், தயிா், பச்சரிசி மாவு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.