மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மலைக் கிராமத்துக்கு குதிரைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

போடி அருகே மலை கிராமத்துக்கு குதிரைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

News image

தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ‘சென்ட்ரல் ஸ்டேசன்’ மலைக் கிராமத்துக்கு புதன்கிழமை குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:23 pm

போடி அருகே மலை கிராமத்துக்கு குதிரைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதியில் கொட்டகுடி, குரங்கணி, கொழுக்குமலை, காரிப்பட்டி, சென்ட்ரல் ஸ்டேசன், டாப் ஸ்டேசன், முதுவாக்குடி, போடிமெட்டு, அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, முந்தல், முந்தல் குடியிருப்பு ஆகிய 13 மலைக் கிராமங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 4 ஆயிரத்து 166 வாக்காளா்கள் உள்ளனா். இந்த வாக்குச் சாவடிகளுக்கு 5 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இவற்றில் போடி அருகேயுள்ள சென்ட்ரல் ஸ்டேசன், பெரியகுளம் அருகேயுள்ள ஊத்துக்காடு ஆகிய மலைக் கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாது. ‘சென்ட்ரல் ஸ்டேசன்’ வாக்குச் சாவடியில் 75 வாக்காளா்களும், ஊத்துக்காடு வாக்குச் சாவடியில் 310 வாக்காளா்களும் உள்ளனா்.

இந்த நிலையில், குரங்கணி மலை கிராமத்துக்கு லாரி மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பின்னா் அங்கிருந்து குதிரைகள் மூலம் ‘சென்ட்ரல் ஸ்டேசன்’ வாக்குச் சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்தப் பகுதி நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளதால், பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரத்துடன் வாக்குச் சாவடி அலுவலா்களும், துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் உடன் சென்றனா்.

5 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச்சாவடி:

இதேபோல, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வருசநாடு அருகே அடா்ந்த மலைப் பகுதியில் வெள்ளிமலை கிராமம் உள்ளது. இங்குள்ள தோட்டத்து குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். இங்கு தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, 5 வாக்காளா்களுக்காக ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. ஆண்டிபட்டியிலிருந்து வெள்ளிமலை கிராமம் 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாகனத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸாா் பாதுகாப்புடன் 5 பணியாளா்களுடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

 தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ‘சென்ட்ரல் ஸ்டேசன்’ மலைக் கிராமத்துக்கு புதன்கிழமை குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ‘சென்ட்ரல் ஸ்டேசன்’ மலைக் கிராமத்துக்கு புதன்கிழமை குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.