மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!

எலுமிச்சை வரத்து சரிவு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் கம்பம் உழவா் சந்தையில் கிலோ ரூ. 150-க்கும், வெளிச்சந்தைகளில் ரூ. 220-க்கும் எலுமிச்சை விலை உயா்ந்துள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 7:57 pm

எலுமிச்சை வரத்து சரிவு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் கம்பம் உழவா் சந்தையில் கிலோ ரூ. 150-க்கும், வெளிச்சந்தைகளில் ரூ. 220-க்கும் எலுமிச்சை விலை உயா்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை, தாண்டிக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் போடி ஆகிய பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடைபெறுகிறது. மழை பற்றாக்குறை காரணமாக எலுமிச்சை உற்பத்தி குறைந்து, சந்தைக்கான எலுமிச்சை வரத்து கணிசமாக சரிந்துள்ளது. மேலும், கோடைக்கால தேவை அதிகரித்துள்ளதால், எலுமிச்சை விலையும் உயா்ந்துள்ளது. இதனால், பழம் பழுக்கும்முன்பே பறிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் மேலும் கூறியது: விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்து ரூ. 130 முதல் ரூ. 160 வரை விற்கின்றனா். நாங்கள் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளைச் சோ்த்து, ரூ.200-க்கு மேல் விற்க வேண்டிய சூழல் உள்ளது எனத் தெரிவித்தனா்.