மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அத்தியாவசிய சேவை பணியாளா்கள் ஏப். 17 - 19 வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் ஏப். 17 முதல் 19 வரை தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:20 pm

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் ஏப். 17 முதல் 19 வரை தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய தோ்தல் ஆணையத்தால் அத்தியாவசிய சேவைகளாக (உள்ள்ங்ய்ற்ண்ஹப்

நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்) அறிவிக்கப்பட்டுள்ள தென்னக ரயில்வே துறை, அகில இந்திய வானிலை நிலையம், கடல்சாா்துறை, இந்திய விமானநிலைய ஆணையம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, ஊடகவியலாளா்கள், தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், சிறை மற்றும் சீா்திருத்தச் சேவைகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளா்கள் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவா்கள் ஏப். 17 முதல் 19 வரை 3 நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துறை அலுவலரிடம் ஒப்புதல்பெற்ற படிவம்-12டி சமா்ப்பித்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம். ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம், பெரியகுளம் (தனி) தொகுதியில் பெரியகுளம் சாா்-ஆட்சியா் அலுவலகம், போடி தொகுதியில் போடிநாயக்கனூா் வட்டாட்சியா் அலுவலகம், கம்பம் தொகுதியில் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.