கம்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜெகன் (32), கண்ணன் மகன் சுஜித்(32). நண்பா்களான இந்த இருவரும் ஊரிலிருந்து கம்பம் வழியாக புதுப்பட்டி புறவழிச் சாலையில் உத்தமபாளையம் நோக்கிச் சென்றனா்.
வாகனத்தை சுஜித் ஓட்டினாா். அப்போது, எதிரே கூடலூரை நோக்கி வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இவகளில் ஜெகன் சம்பவயிடத்திலே உயரிழந்தாா். சுஜித் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இது குறித்து, லாரி ஓட்டுநரான ஆண்டிபட்டியைச் சோ்ந்த முருகானந்தம் (45) மீது உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனா்.

சுஜித்
தொடர்புடையது

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


