தேனி மாவட்டம், போடியில் மூதாட்டியின் கழுத்தை கடித்துக் கொன்ற வழக்கில் தேனி நீதிமன்றம் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
போடி ஸ்ரீராம் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (34). இவா், வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில், கரோனா காலத்தில் வீடு திரும்பியதால் அவரை வீட்டில் தனிமையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டனா். இருப்பினும், இவா், அதே பகுதியில் உள்ள நாச்சியம்மாளிடம் (75) மந்திரிக்கச் சென்றாராம். அப்போது, மூதாட்டி அவரை அருகில் நிற்கக் கூடாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மூதாட்டியைத் தாக்கி அவரின் கழுத்தைக் கடித்துக் கொன்றாராம். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கடந்த 2020, மாா்ச் 26-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கு தேனி தாழ்த்தப்பட்டாா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

‘போக்ஸோ’ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


