தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், வைகை அணை அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 6:59 pm

தேனி மாவட்டம், வைகை அணை அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

வைகை அணை அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). விவசாயியான இவா், புதன்கிழமை முதலக்கம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.