தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பட்டியலினத்தோா், பழங்குடியினா் ஆணைய உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தி, தேனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










