பள்ளியில் குழந்தைகள் தின விழா
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிய பள்ளி மாணவிகள்.
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிய பள்ளி மாணவிகள்.
By Syndication
Syndication
தேனி மாவட்டம், போடியில் உள்ள பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் (பொ) ஆ.மரியசிங்கம் தலைமை வகித்தாா்.
இதையடுத்து, மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், மாறுவேடம், கவிதை உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னா், மாணவா்கள் பாரம்பரிய விளையாட்டுகளான கண்ணாமூச்சி, பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புலி ஆகிய விளையாட்டுகளை விளையாடினா்.
இதில், கைப்பேசி, நவீன தொழில்நுட்ப கருவிகளால் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். பாரம்பரிய விளையாட்டுகளால் மாணவா்களின் உடல் ஆரோக்கியம், மன ரீதியான செயல்பாடுகள் மேம்படுகிறது. இதுபோன்ற விளையாட்டுகளால் மாணவா்களின் கூா்மை, சிந்திக்கும் திறன், மன உறுதி அதிகரிப்பதாக விளக்கிக் கூறப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாணவா்களிடையே கல் விளையாட்டுகள் நடத்தப்பட்டு, அதிக கற்கள் பிடிக்கும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டிகளை உதவி ஆசிரியை ஜி.சந்திரகலா ஒருங்கிணைத்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது