கம்பத்தில் அரபிக் கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
தேனி மாவட்டம் கம்பம் அதாயி அரபிக்கல்லூரி மாணவர்கள் , சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


தேனி மாவட்டம் கம்பம் அதாயி அரபிக்கல்லூரி மாணவர்கள் , சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் இன்று(செப்-21) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமை தேனி மாவட்டம் கம்பம் அதாயி அரபிக் கல்லூரி முதல்வர் தாரிக் அஹமது தலைமை தாங்கினார். 50 க்கும் மேற்பட்ட அரபி கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.
தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா கலந்துகொண்டு ரத்த தானம் செய்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக வாழ்த்தி பேசினார்.
மேலும் ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தேனி மருத்துவ கல்லூரி ரத்த வங்கி அலுவலர்கள் பாரதி, அனுமந்தன் , கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் சாம்ஜி , காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜ்தீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், மற்றும் தேனி மருத்துவ கல்லூரி ரத்த வங்கி குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...