நத்தத்தை தக்கவைக்குமா அதிமுக?
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நத்தம் தொகுதி மறுசீரமைப்புக்குபிறகு கடந்த 1977ஆம் ஆண்டு முதல்முறையாக பேரவைத் தேர்தலை சந்தித்தது. ஒரு இடைத் தேர்தல் உள்பட இதுவரை நடந்து முடிந்துள்ள 10 தேர்தல்களில், 2 வேட்பாளர்கள் மட்டுமே இத்தொகுதியின் சார்பில் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது தனிச் சிறப்பு.










