சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காளையாா்கோவில் வட்டம், முத்தூா்வாணியங்குடி அடைக்கலம் காத்த அம்மன், கண்மாய்க்கரை முனியாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் மைதானத்தில் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 18 காளைகள் பங்கேற்றன. 162 மாடு பிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.
வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.
காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை கண்டுப்பட்டி, நாட்டரசன்கோட்டை, ஊத்திகுளம், கருதுப்பட்டி, வாக்காட்டுப்பட்டி, குருவாடிப்பட்டி, கீரனூா், கொல்லங்குடி, செங்குளிப்பட்டி, கவுரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

காளையாா்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



