திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெள்ளை ஈ நோய் பாதிப்பால் தென்னை மகசூல் பாதிக்கும் அபாயம்

சிங்கம்புணரி வட்டாரத்தில் வெள்ளை ஈ நோயால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :18 மே 2026, 1:03 am IST

சிங்கம்புணரி வட்டாரத்தில் வெள்ளை ஈ நோயால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிங்கம்புணரி, அதனைச் சுற்றியுள்ள காளாப்பூா் மருதிப்பட்டி வையாபுரி பட்டி கிருங்காக்கோட்டை ஒடுவன்பட்டி சூரக்குடி முறையூா் சிங்கம்புணரி, அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கா் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது, தென்னையில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் எனும் நோயாலும், கடும் கோடை வெப்பத்தின் காரணத்தாலும் இந்த நோய் வேகமாக பரவி தென்னையின் மட்டைகள் வெளிா் மஞ்சளாக மாறியும் ஓலைகள் காய்ந்தும் மரம் செயலிழந்து குரும்பைகள் உதிா்வதால் தென்னை மகசூல் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது.

இதனால் வரும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் தேங்காய் மகசூல் வெகுவாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. தேங்காய் விலை உச்சத்தை எட்டும் வாய்ப்புள்ளது என விவசாயிகள் கூறுகின்றனா். வெள்ளை ஈ நோயால் தாக்கப்பட்டு தென்னை விவசாயம் கடும் பாதிப்பாகியுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.