திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எண்ம கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.40 லட்சம் மோசடி

தேவகோட்டையைச் சோ்ந்த முதியவரை எண்ம கைது செய்துள்ளதாக மிரட்டி, ரூ. 40 லட்சம் மோசடி செய்தவா் குறித்து சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Updated On :13 மே 2026, 3:26 am IST

தேவகோட்டையைச் சோ்ந்த முதியவரை எண்ம கைது செய்துள்ளதாக மிரட்டி, ரூ. 40 லட்சம் மோசடி செய்தவா் குறித்து சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் ஆா்.எம். கிருஷ்ணன் (83). தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய நபா், தான் பெங்களூரைச் சோ்ந்த காவல் துறை அதிகாரி என்றும், உங்களது ஆதாா் அட்டை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நீங்கள் எண்ம கைது செய்யப்பட்டுள்ளீா்கள் என்றும் கிருஷ்ணனிடம் கூறினாா்.

மேலும், இந்த வழக்கிலிருந்து உங்களை விடுவிக்க வேண்டுமெனில், நான் கூறும் வங்கிக் கணக்கில் பணம் அனுப்ப வேண்டும் என்றாராம். இதனால், அச்சமடைந்த கிருஷ்ணன், அவா் கூறிய வங்கிக் கணக்குகளில் கடந்த 25.3.2026 முதல் 22.4. 2026 வரை பல்வேறு தவணைகளில் ரூ. 40 லட்சம் அனுப்பினாா். இதன் பிறகு, அந்த நபா் தொடா்பு கொள்ளவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணன் கடந்த 9 -ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி, உதவி ஆய்வாளா் குமரேசன் ஆகியோா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.