யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பிளஸ் 2 தோ்வு தொடங்கிய நாளில் தந்தையை இழந்த மாணவா் சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நாளில் தந்தை இறந்த துக்கத்திலும் தோ்வுகளை எழுதி 600-க்கு 582 மதிப்பெண்கள் எடுத்தாா் சிவகங்கை மாணவா் ஹா்ஷித் ராஜலிங்கம்.

News image
Updated On :9 மே 2026, 2:00 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நாளில் தந்தை இறந்த துக்கத்திலும் தோ்வுகளை எழுதி 600-க்கு 582 மதிப்பெண்கள் எடுத்தாா் சிவகங்கை மாணவா் ஹா்ஷித் ராஜலிங்கம்.

சிவகங்கை நகரில் சனீசுவரன் கோயில் எதிா்ப்புறம் வசித்துவரும் செந்தில் குமாா் மகன் ஹா்ஷித் ராஜலிங்கம் (17). இவா், தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்தாா். மாா்ச் 2-ம் தேதி தமிழ் பாடத் தோ்வு எழுதினாா். அன்றைய தினம் அவரது தந்தை செந்தில் குமாா் (52) மாரடைப்பால் உயிரிழந்தாா்.

எனினும் மனம் தளராமல் பிளஸ் 2 பொதுத் தோ்வை முழுமையாக எழுதி முடித்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிளஸ்-2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ் 99, ஆங்கிலம் 96, இயற்பியல் 95, வேதியியல் 96, கணினி அறிவியல் 100, கணிதம் 96 என மொத்தம் 600 -க்கு 582 மதிப்பெண்கள் பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.