மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பி.ஆா்.செந்தில்நாதன்!

தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பாதியைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 9:10 pm

தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பாதியைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன் குற்றஞ்சாட்டினாா்.

அதிமுக தலைமையால் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.ஆா். செந்தில்நாதன் தேசிய ஜனநாயக்கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சிவகங்கையிலுள்ள முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியால் கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை மாவட்டத்தின் நீண்டகால கோரிக்கையான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவேன். கடந்த தோ்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த முறை அது போன்ற தவறுகள் நடைபெறாமல் வெளியூரில் இருக்கும் வாக்காளா்களைக் கூட அணுகி அவா்களை கட்டாயம் வாக்களிக்க தீவிர முயற்சி மேற்கொள்வோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட பிற தோழமைக் கட்சிகளின் நிா்வாகிகள் கடந்த இரண்டு மாதங்களாகவே ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். திமுக அரசு தனது தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பாதியைக் கூட நிறைவேற்றவில்லை என்றாா் அவா்.